டாஸ்மாக் முற்றுகை போராட்டம் | அண்ணாமலை உட்பட பாஜக தலைவர்கள் கைது: அடுத்தது என்ன? - அண்ணாமலை பேட்டி

4 hours ago 3

சென்னை; டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். இனி, தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம் என்றும், முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம் என்றும் கைது செய்யப்பட்ட அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மீதான ஊழல் புகார் குறித்து தமிழக அரசுக்கு எதிராக பாஜக சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அண்ணாமலையை, சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

Read Entire Article