டாஸ்மாக் சோதனை: அமலாக்க துறை மீது அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்

1 month ago 9

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவன மதுபான கொள்முதல், பார் உரிமம், போக்குவரத்து போன்றவற்றுக்கான டெண்டர் உள்ளிட்டவை மூலமாக ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

Read Entire Article