நாமக்கல், பிப்.8: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாது: வரும் 11ம் தேதி, வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள், மற்றும் லைசென்ஸ் பெற்ற அனைத்து வகையான பார்களையும் மூடவேண்டும். இந்த உத்தரவை மீறி, மதுக்டைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்மந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post டாஸ்மாக் கடைகளை 11ம்தேதி மூட உத்தரவு appeared first on Dinakaran.