டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

3 weeks ago 3

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி வியாழன் கிழமை வருவதால், அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பணி நாள். அதற்கடுத்து இரண்டு நாட்கள் வார விடுமுறை என்பதால் வெள்ளிக் கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்று வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக நவம்பர் 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்துள்ளது. சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதன்மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article