குன்னூர், பிப்.17: டால்பின் நோஸ் காட்சிமுனை பகுதியில் வார விடுமுறையை முன்னிட்டு வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக டால்பின் நோஸ் காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
கிட்டத்தட்ட 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த காட்சி முனை பகுதியில் இருந்து கேத்ரீன் நீர் வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். மேலும் மேக மூட்டமின்றி பள்ளத்தாக்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதனை காண வெளி மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் டால்பின் நோஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தலங்களில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post டால்பின் நோஸ் காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.