டாரஸ் லாரியை மறித்து பணம் பறித்தவருக்கு குண்டாஸ்

4 months ago 14

 

கரூர், ஜன. 7: கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சின்னமநாயக்கன்பட்டி பிரிவு அருகே மணல் ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரியை வழிமறித்து, பணம் பறிக்க முயன்றதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி ராஜாவை வெள்ளியணை போலீசார் கடந்த மாதம் 6ம்தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ராஜா மீது கரூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ராஜாவை, மாவட்ட எஸ்பி பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

The post டாரஸ் லாரியை மறித்து பணம் பறித்தவருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article