டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

5 hours ago 2

சென்னை: 2025ம் ஆண்டு டான்செட் மற்றும் சீட்டா தேர்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. டான்செட் தேர்வு கடந்த மார்ச் 22ம் தேதி நடத்தப்பட்டது. இதில் எம்பிஏ தேர்வை 20,992 பேரும், எம்சிஏ தேர்வை 9,699 பேரும் எழுதினர். தொடர்ந்து சீட்டா தேர்வு மார்ச் 23ல் நடந்தது. இந்த தேர்வை 4,632 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் டான்செட் மற்றும் சீட்டா தேர்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதன்பின்னர் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை மேற்கண்ட வலைத்தளத்தில் இருந்து மே 7 முதல் ஜூன் 6ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் நடைபெறும். இவ்வாறு பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article