டாடா மோட்டார்ஸ்

2 weeks ago 1

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ, டிகோர் ஆகியவற்றை தொடர்ந்து புதிய மேம்படுத்தப்பட்ட டாடா நெக்சான் காரை அறிமுகம் செய்துள்ளது. இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு தேர்வுகளில் வருகிறது. இதுதவிர 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜினிலும் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட இந்த கார் புதிய கார்பன் பிளாக், கிரியேட்டிவ் புளூ, ராயல் புளூ மற்றும் கிராஸ்லாண்ட் பீஜ் வண்ணங்களில் கிடைக்கும்.

ரியர் வியூ கேமரா, உயரத்தை சரி செய்து கொள்ளக்கூடிய டிரைவர் சீட், தானாக மடங்கிக் கொள்ளக் கூடிய வெளிப்புறத்தில் உள்ள ரியர் வியூ மிரரர்கள், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், புதிதாக பியூர் பிளஸ், பியூர் பிளஸ் எஸ் ஆகிய புதிய வேரியண்ட்களும் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டாப் வேரியண்டான பியூர் பிளஸ் எஸ்-ல் ரெயின் சென்சார் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப், சன்ரூப் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ₹7.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post டாடா மோட்டார்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article