சித்தூர் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி ரயிலில் கொள்ளையடிக்கும் வட மாநில கொள்ளையன் கைது

3 hours ago 3

*50 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

சித்தூர் : சித்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் கொள்ளையடிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சித்தூர் ரயில்வே போலீசார் நேற்று கைது செய்து அவரிடம் இருந்து ₹4 லட்சம் 50 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சித்தூர் ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோடீஸ்வர ராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: குண்டக்கல் ரயில்வே எஸ்பி ராகுல் மீனா, திருப்பதி ரயில்வே டிஎஸ்பி ஹர்ஷிதா, ரேணிகுண்டா ரயில்வே இன்ஸ்பெக்டர் யதேந்திரய்யாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 6ம் தேதி சித்தூர் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் ரயில்வே போலீசார் சித்தூர் ரயில் நிலையத்தில் 2வது பிளாட்பார்மில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது நடைமேடையில் ஒரு ஆண் நபர் நின்று கொண்டிருந்தார். அவர் போலீஸ்காரர்களைக் கண்டதும் தப்பிக்க முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் தப்ப முயன்ற நபரை ரயில்வே நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை செய்தனர்.

அதில் பிரகாஷ் அஸ்ருபா நாகர்கோஜே(28) வாஸ்தி வீதி, பங்கரஞ்சா கிராமம், கைஜா தாலுகா, பீட் மாவட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் மீது சுமார் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் சிறைக்கும் சென்றது தெரிய வந்தது. மேலும் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 50 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர் எந்தெந்த ரயிலில் ரயில் வழிப்பறியில் ஈடுபட்டார் என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் ஏராளமான ரயில்வே போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

The post சித்தூர் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி ரயிலில் கொள்ளையடிக்கும் வட மாநில கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article