மும்பை,
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86). இவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக மும்பை பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் வயது முதிர்வு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு ரத்தன் டாடா உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர். 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா குழுமத்தின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.