டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்

2 hours ago 3

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் தாக்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூனியர் மருத்துவர்கள் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து ஜூனியர் மருத்துவர்கள் 42 நாள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த 20ம் தேதி பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர். இதற்கிடையே, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் கமர்ஹாத்தியில் உள்ள சாகர்தத்தா அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மூச்சுத்திணறலுடன் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பலியானார்.

செயற்கை ஆக்சிஜன் தருவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குள் அந்த பெண் இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் எந்த சிகிச்சையும் தராமல் இருந்ததாக நோயாளியின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டி, பெண்கள் வார்டில் இருந்த ஜூனியர் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தை கண்டித்து சாகர்தத்தா அரசு மருத்துவமனை ஜூனியர் மருத்துவர்கள், செவிலியர்கள் மீண்டும் பணி நிறுத்த போராட்டத்தை தொடர்வதாக நள்ளிரவில் அறிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் மருத்துவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

The post டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article