டாக்டர், நர்சு மீது தாக்குதல்: 12 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

7 months ago 27

கவுகாத்தி,

அசாம் மாநிலம் ஹொஜெய் மாவட்டம் பஹல்தொல் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையி கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் டாக்டராக பணியாற்றியவர் சிஜோ குமார் சேனாபதி.

இதனிடையே, 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் சிஜோ குமார் சேனாபதி, நர்சு ஆகிய 2 பேரையும் கடுமையாக தாக்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய 12 பேரை கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், டாக்டர், நர்சு மீது தாக்குதல் நடத்திய 12 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Read Entire Article