சென்னை: டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழாவையொட்டி ஊடகத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா, நாளை (27.4.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெறுகிறது.
இதில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம், எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் அபிஷேக் மனு சிங்வி, எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் என்.ஆர். இளங்கோ, எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வரவேற்புரை நிகழ்த்த, தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் கே. சந்திரமோகன் நன்றியுரை ஆற்றுகிறார்.
தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில், அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் பேராசிரியர் ராஜிவ் கவுடா எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமான “இந்திய பொருளாதாரம் உண்மை நிலை – வளர்ச்சி எங்கே ?” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர். ஜே.எம்.எச். ஹசன் மௌலானா ஆகியோர் உரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் மாணிக்கவாசகம் தலைமையேற்க தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் செ. ராம்மோகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். என்.எம். பிரியதர்ஷன் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், இந்நாள் – முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள், மாவட்ட, வட்டார / சர்க்கிள், நகர, பேரூர், வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா: ஊடகத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அழைப்பு appeared first on Dinakaran.