டங்ஸ்டன் சுரங்கம்: நாளை மகிழ்ச்சியான செய்தி வரும் - அண்ணாமலை பேட்டி

11 hours ago 1

சென்னை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி உள்பட சுற்றி உள்ள 5000 ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தால் மேலூர் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டங்ஸ்டன் விவகாரத்தில், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை பாஜகவினர் டெல்லி அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் நாளை மத்திய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளனர். நாளை பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வரும். இதில் உறுதியாக இருக்கிறோம். நாளை மதியத்திற்கு மேல் பேசுகிறோம். இந்த பிரச்சினை குறித்து தெரிந்த பிறகு, இதற்கு தீர்வு கொடுக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

கோமியம் குறித்து சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசியது சிலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். சிலருக்கு ஏற்புடையதாக இருக்காது. இதனை விட்டுவிடலாம். அனைவருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உள்ளது. அதனை யார் மீதும் திணிக்கவிரும்பவில்லை. பொது வெளியில் ஒரு கருத்தை திணிக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். தனிப்பட்ட முறையில் ஐஐடி இயக்குனர் நல்ல மனிதர்; பல திறமைகளைக் கொண்டவர். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article