மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரிட்டாபட்டி உள்பட 50 கிராமங்களில் 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் கிளை நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டம்.. மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம்!! appeared first on Dinakaran.