டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி: அண்ணாமலை

5 hours ago 1

புதுடெல்லி,

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் , இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது,

அரிட்டாபட்டி சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை அரிட்டாபட்டி பகுதி மக்கள் இன்று நிம்மதியாக தூங்குவர். டங்ஸ்டன் சுரங்கம் தேவையென்றாலும் விவசாய பகுதி,பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு சுரங்க ஏல ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் மற்றும் சுரங்கம் அமைய இருந்த பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட விவசாயிகள் குழு டெல்லியில் நேற்று மத்திய சுரங்கத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அவரது அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . 

Read Entire Article