மதுரை: மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள், கிராம மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளம் தமுக்கம் மைதானம் வரை நடைபயணமாக வந்தனர். இதில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அப்போது, சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, பேரணி சென்றவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் முன்னே செல்ல, அவர்கள் நடைபயணத்தை தொடர்ந்தனர். கட்டுப்பாடுகளை மீறியதாகவும், அனுமதியில்லாமல் பேரணி சென்றதாகவும் 2 ஆயிரம் பெண்கள் உள்பட 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post டங்ஸ்டனுக்கு எதிராக மதுரையில் அனுமதியின்றி பேரணி: 2 ஆயிரம் பெண்கள் உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.