ஜோகன்னஸ்பர்க்கில் இன்று 4வது டி.20 போட்டி; வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்தியா ரெடி.! பதிலடி கொடுக்க காத்திருக்கும் தென்ஆப்ரிக்கா

1 hour ago 2

ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3வது போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியிலும் தென்ஆப்ரிக்காவும் வெற்றிபெற்றது. 4வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. 2-1 என முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் முதல் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் அடுத்த 2 போட்டியிலும் டக்அவுட் ஆனார். டி.20யில் தனது இடத்தை தக்க வைக்க இன்று ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அபிஷேக் சர்மா, திலக்வர்மா, சூர்யகுமார், ஹர்திக்பாண்டிா, ரிங்கு சிங் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் அர்ஷ்தீப்சிங் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவி வருகிறார். சுழலில் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல் எதிரணிக்கு நெருக்கடி அளிக்கின்றனர். மறுபுறம் தென்ஆப்ரிக்கா சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்து விடாமல் சமன் செய்யவேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பவுலிங்கில் மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜை தவிர மற்றவர்களை ரன்களை வாரி இறைத்து வருகின்றனர்.

தவறுகளை சரி செய்து இன்று வெற்றி முனைப்பில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இன்று 31வது முறையாக டி.20 கிரிக்கெட்டில் மோத உள்ளன. இதற்கு முன் ஆடிய 30 போட்டியில் 17ல் இந்தியா, 12ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்தியா இதற்கு முன் 6 போட்டிகளில் ஆடி தென்ஆப்ரிக்காவுடன் 3 முறை, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறை என 4ல் வென்றுள்ளது. 2 போட்டியில் (தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்துக்கு எதிராக) தோல்வி அடைந்துள்ளது. தென்ஆப்ரிக்கா இங்கு 25 போட்டியில் ஆடி 14ல் வெற்றி, 11ல் தோல்வி கண்டுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் இதுவரை 14 முறை 200 பிளஸ் ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன.

The post ஜோகன்னஸ்பர்க்கில் இன்று 4வது டி.20 போட்டி; வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்தியா ரெடி.! பதிலடி கொடுக்க காத்திருக்கும் தென்ஆப்ரிக்கா appeared first on Dinakaran.

Read Entire Article