
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இதற்கு முன் இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை ஜேசன் சஞ்சய் இயக்கி வருகிறார். இதில், நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் துவங்கியது. மேலும், முதற்கட்டமாக சந்தீப் கிஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் சந்தீப் கிஷன் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு, இப்படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.