![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/38996359-jesa.webp)
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்தார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். இதில், நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
கடந்த பல மாதங்களாக இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், முதற்கட்டமாக சந்தீப் கிஷன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.