கோவை, மே 22: ஜெர்மனியில் நடக்கும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையான தடகள போட்டிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். சர்வதேச பல்கலைக்கழங்களுக்கு இடையான தடகள போட்டி ஜெர்மன் நாட்டில் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க பாரதியார் பல்கலைக்கழகம் இணைப்பு கல்லூரியான உடுமலைபேட்டை ஜிவிஜி மகளிர் கல்லூரியின் மாணவி ஏஞ்சல் சில்வியா 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்கவும், திருப்பூர் ஜெயின்ட்.ஜோசப் கல்லூரி மாணவி வர்த்தினி 400மீ தடை தாண்டும் போட்டியில் பங்கேற்கவும் தேர்வாகி உள்ளனர்.
இதில், வீராங்கனை ஏஞ்சல் சில்வியாவிற்கான செலவான ரூ.25 லட்சத்தை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. வர்த்தினிக்கான செலவை திருப்பூர் தனியார் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டியில் பங்கேற்க விசா மற்றும் போக்குவரத்திற்கான ஏற்பாடுகளை புவனேஸ்வர் கலிங்கா இன்ஸ்டியூட் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி என்ற தனி நிகர் பல்கலைக்கழகம், ஒடிசா மாநில நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரூபா குணசீலன், துணைவேந்தர் குழு உறுப்பினர் அஜித்குமார் லால் மோகன், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் அண்ணாதுரையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
The post ஜெர்மனியில் நடக்கும் சர்வதேச பல்கலை. தடகள போட்டிக்கு பாரதியார் பல்கலை. வீராங்கனைகள் தேர்வு appeared first on Dinakaran.