'ஜெய் அனுமான்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்: அனுமானாக அவதாரம் எடுத்த ரிஷப் ஷெட்டி

2 months ago 12

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான 'அனுமான்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார். இந்த படத்தில் வெற்றியைத்தொடர்ந்து, இதன் தொடர்ச்சியாக 'ஜெய் அனுமான்' படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார்.

விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இயக்குனர் தெரிவித்திருந்தநிலையில், இந்த படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, ரிஷப் ஷெட்டியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Extremely honoured to have you on board, sir.#JaiHanuman will truly be epic ✨ https://t.co/NEKzl8jDyT

— Mythri Movie Makers (@MythriOfficial) October 30, 2024
Read Entire Article