ஜெயலலிதாவின் இருக்கையில் இருப்பதால் வேறு உலகத்தில் எடப்பாடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்: டிடிவி.தினகரன் கடும் தாக்கு

3 weeks ago 5

திருவண்ணாமலை: ஜெயலலிதா இருந்த இருக்கையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார். திருவண்ணாமலையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு துரோகம், சுயநலம் தவிர வேறு எதுவும் தெரியாது. பதவியில் இருப்பதற்காக யார் காலையும் பிடிப்பார்.

எந்த துரோகத்தையும் செய்வார். என் பெயரை கூட சரியாக சொல்லத் தெரியாத எடப்பாடி பழனிசாமியின் கப்பல் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கிறது. பத்து ேதால்வி பழனிசாமி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு, முதல்வரான பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உள்பட எல்லா தேர்தல்களிலும் தோல்வியடைந்து இருக்கிறார். விக்கிரவாண்டியிலும் போட்டியிடவில்லை.
ஜெயலலிதாவோடு அவரை ஒப்பிட முடியாது.

ஜெயலலிதா இருந்த இருக்கையில் உட்கார்ந்திருப்பதால், ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, வேறொரு உலகத்தில் பழனிசாமி வாழ்ந்துகொண்டிருக்கிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவார். இரட்டை இலையும், அதிமுகவும் அவரிடம் இருக்கிறது என்பதற்காக, அவருக்கு காவடி தூக்கிக் கொண்டிருந்தால், அவர் கட்சியை அழித்து விடுவார், விழித்துக் கொள்ளுங்கள் என்று அதிமுக தொண்டர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

* ராமதாஸ்- டிடிவி திடீர் சந்திப்பு
திருவண்ணாமலையில் நடந்த உழவர் பேரியக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், திருவண்ணாமலை ஈசான்யம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். அதேபோல், கட்சி நிர்வாகியின் திருமணத்துக்காக வந்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதே ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில், இருவரும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் வரவேற்பு அறையில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, பாமக நிறுவனர் ராமதாசும், டிடிவி தினகரனும் ஒருவருக்கு ஒருவர் நலன் விசாரித்து கொண்டனர்.

The post ஜெயலலிதாவின் இருக்கையில் இருப்பதால் வேறு உலகத்தில் எடப்பாடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்: டிடிவி.தினகரன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article