முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைவதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க உத்தரவிட்டார். ஆனால் ஆட்சி மாற்றம் வந்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைய விட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி நீக்கியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேரவையில் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கோவி.செழியன், காழ்ப்புணர்ச்சி காரணம் என உறுப்பினர் கே.பி.அன்பழகன் கூறுகிறார். ஏற்கனவே ஜெயலலிதா பெயரில் இசை மற்றும் மீனவள பல்கலைக்கழகங்கள் உள்ளது. பல்கலைக்கழகத்தின் அனுமதி ஆளுநர் மாளிகையில் தேங்கியிருந்தது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தான் சட்டப்போராட்டம் நடத்தினார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ராணி மேரி கல்லூரி உள்ள இடத்தில் தலைமை செயலகம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு எதிராக கலைஞர் சட்ட போராட்டம் நடத்தி கல்லூரியை மீட்டார். திமுக ஆட்சிக்கு வந்த போது பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பள்ளி பேக் களில் ஜெயலலிதா படம் இருந்தது. முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், ஏழை எளிய மக்கள் பணம் வீணாக கூடாது, ஜெயலலிதா படம் இருந்தாலும் பரவாயில்லை, மாணவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்க உத்தரவிட்டனர்.
திமுக ஆட்சியில் வண்ண தொலைக்காட்சி வழங்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஆனதும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வண்ண தொலைக்காட்சி பெட்டியில் கலைஞர் படம் இருந்ததால் மக்களுக்கு வழங்கவில்லை. இதன் மூலம் முதலமைச்சருக்கு காழ்ப்புணர்ச்சி என்பது தெரிகிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவின் திட்டங்களை அதிமுக மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. ஆனால் முதலமைச்சர் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்படுகிறார் என அமைச்சர் கோவி.செழியன் பதிலளித்தார்.
The post ஜெயலலிதா பெயரில் பல்கலை அமைக்க சட்ட போராட்டம் நடத்தியவர் முதல்வர்: அமைச்சர் கோவி.செழியன் appeared first on Dinakaran.