ஜெயம் ரவி நடித்துள்ள 'ஜீனி' படத்தின் ரிலீஸ் அப்டேட்

3 days ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையில் இவரது நடிப்பில் 'பிரதர்' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள 'ஜீனி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 

இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றது. இதில் 'ஜீனி' கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article