அரியலூர், பிப். 22: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு ;அரியலூர் மாவட்டத்தில் பிப்ரவரி 25 மற்றும் பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் – மூன்றாம் கட்ட முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மேற்கண்ட நாட்களில் நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள் நிருவாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. முகாம்கள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
The post ஜெயங்கொண்டம், தா.பழூர் பகுதிகளில் 25, 26 தேதிகளில் நடக்க இருந்த மக்களுடன் முதல்வர் முகாம்கள் ரத்து appeared first on Dinakaran.