ஜெயங்கொண்டம், பிப்.10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜெ.தத்தனூர் மேலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் 14ம் ஆண்டு பால் குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேற்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பால் குடத் திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நிறுத்திக்கடன் செலுத்தினர். முன்னதாக சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்துபக்தர்கள் கடும் விரதம் இருந்து ஏரிக்கரையில் இருந்து சக்தி கரகங்கள் ஜோடிக்கப்பட்டு மற்றும் பால்குடம் எடுத்து அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். இதில் அக்னி கரகம்,பூங்கரகம், உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு குத்து விளக்கு பூஜையும் கன்னி பூஜையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post ஜெயங்கொண்டம் அருகே மகா மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா appeared first on Dinakaran.