ஜெயங்கொண்டம் அருகே தென்னூர் புனித லூர்து அன்னை கோயில் 179 ஆம் ஆண்டு பெருவிழா

3 months ago 10

ஜெயங்கொண்டம் பிப்.11: ஜெயங்கொண்டம் அருகே தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய 179 ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர் பவனி நேற்று நடைபெற்றது. தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய 179 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த இரண்டாம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு ஜோசப் கென்னடி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இரண்டாம் தேதியில் இருந்து நேற்று வரை சிறப்பு கூட்டுத் திருப்பலியும் இரவுசிறிய தேர் பவணியும் பல்வேறு பங்கு தந்தையர்கள் தலைமையில் மற்றும் பல்வேறு மறை மாவட்ட வட்ட முதன்மை குரு தலைமையிலும் திருப்பலிகள் நடைபெற்றது.

பத்தாம் தேதி நேற்று இரவு புனித லூர்து அன்னையின் ஆடம்பர தேர் பவனியும் நடைபெற்றது. இன்று காலை அன்னையின் கொடி இறக்க நிகழ்ச்சி சிறப்பு திருப்பலி நடைபெறும். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை லியோ, பங்கு பேரவையினர், நாட்டாமைக்காரர்கள், மற்றும் அருட்சகோதரிகள் செய்து இருந்தனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே தென்னூர் புனித லூர்து அன்னை கோயில் 179 ஆம் ஆண்டு பெருவிழா appeared first on Dinakaran.

Read Entire Article