ஜெஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட ஹெக்டார் காரை அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் மாற்றம் எதுவும் இல்லை. இதில் 2 வித இன்ஜின் தேர்வுகள் உள்ளன. 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 142 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 168 எச்பி பவரையும் 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். எம்ஜி ஹெக்டாரில் ஸ்டையில், ஹைன் புரோ, செலக்ட் புரோ, ஸ்மார்ட் புரோ, ஷார்ப் புரோ மற்றும் சாவி புரோ என 6 வேரியண்ட்கள் உள்ளன. லெவல் 2 அடாஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஸ்பீடு சென்சார் டோர் லாக் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துக்க ஷோரூம் விலை சுமார் ரூ.13.99 லட்சம்.
The post ஜெஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் appeared first on Dinakaran.