சிவகங்கை, ஜூலை 9: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் நுகர்வோர் சிறப்பு முகாம் ஜூலை 12 அன்று நடக்க உள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேஷன் நுகர்வோர் சிறப்பு முகாம் ஜூலை 12, காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். இம்முகாமில் ரேஷன் கார்டுதாரர்கள் கலந்துகொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகலட்டை பெறுதல், செல் பேசி எண் மாற்றம் மற்றும் கடையின் செயல்பாடு, பொருட்களின் தரம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜூலை 12ல் ரேஷன் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.