சென்னை: ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையை நான் தொடங்கி வைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டை கட்டமைப்பார்கள். 2026ல் மீண்டும் திமுக ஆட்சியை அமைப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். கட்சியினரின் மனக்குரலை அறியவே ‘உடன்பிறப்பே வா’ எனும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறுகிறது. மதவாத பிரிவினையை உருவாக்குவோருக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.
The post ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையை நான் தொடங்கி வைக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.