ஜூன்.30க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பக்கம்

5 hours ago 4

தஞ்சை: தஞ்சை மக்கள் ஜூன்.30க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்று பரவும் செய்தி வதந்தி என தகவல் சரிபார்ப்பக்கம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில், தஞ்சை மக்களே ஜூன்.30 ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர் பெயர் நீக்கம், போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது?” என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் தஞ்சாவூர் மக்கள் குழப்பம் அடைந்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இது தவறான தகவலாகும். “AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை. சமூக ஊடகத்தின் மூலம் வரப்பெற்ற செய்தியில் உண்மை ஏதுமில்லை.” என்று தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

The post ஜூன்.30க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்பது வதந்தி: தகவல் சரிபார்ப்பக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article