ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசை 44 ரன்களில் சுருட்டிய இந்தியா

2 weeks ago 2

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் நிக்கி பிரசாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். வெறும் 13.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 44 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்டனர். அதிகபட்சமாக கெனிகா கசார் 15 ரன்கள் அடித்தார்.

சிறப்பாக பந்துவீசிய இந்தியா தரப்பில் பருனிகா சிசோடியா 3 விக்கெட்டுகளும், ஜோஷிதா மற்றும் ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீசில் 3 வீராங்கனைகள் ரன் அவுட் ஆனது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இதனையடுத்து 45 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது. 

Read Entire Article