ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இன்று தொடக்கம்

2 hours ago 2

பாங்கி,

ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலாவது உலகக்கோப்பையில் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்த நிலையில் 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் இன்று தொடங்குகிறது. கோலாலம்பூர், பாங்கி, ஜோஹார், குச்சிங் ஆகிய 4 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, இலங்கை, வெஸ்ட் இண்டீசும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவும், 'சி' பிரிவில் நியூசிலாந்து, நைஜீரியா, சமோவா, தென் ஆப்பிரிக்காவும், 'டி' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், ஸ்காட்லாந்தும் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்-6 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர்-6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்படும். சூப்பர்-6 சுற்றில் ஒரு அணி குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். அத்துடன் லீக் சுற்றில் தனது பிரிவில் இருந்து சூப்பர்-6 சுற்றுக்கு முன்னேறும் அணிகளை வீழ்த்தி இருந்தால் அதற்குரிய புள்ளிகளை சூப்பர்-6 சுற்றுக்கு எடுத்து வர முடியும். சூப்பர்-6 சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.

முதல் நாளான இன்று 6 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து, இங்கிலாந்து- அயர்லாந்து, நைஜீரியா- சமோவா, வங்காளதேசம்- நேபாளம், பாகிஸ்தான்- அமெரிக்கா, மற்றும் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

The #U19WorldCup 2025 starts today with six exciting matches Who are you cheering for? pic.twitter.com/btQW1QGe93

— ICC (@ICC) January 17, 2025

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் நாளை மோதுகிறது.

Read Entire Article