ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

3 hours ago 1

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை டேவினா பெர்ரின் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜெமிமா ஸ்பென்ஸ் 9 ரன்களிலும், டுருடி ஜான்சன் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர்.

இத்தகைய இக்கட்டான நிலையிலிருந்து அணியை டேவினா பெர்ரின் மற்றும் கேப்டன் அபி கை கோர்த்து மீட்டனர். டேவினா பெர்ரின் 45 ரன்களிலும், அபி 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் ரன்கள் அடித்தது. இந்தியா தரப்பில் வைஷ்னவி சர்மா மற்றும் சிசோடியா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தொடக்க வீராங்கனை திரிஷா 35 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை கமிலினி அரைசதம் அடித்து அணியை எளிதில் வெற்றி பெற வைத்தார்.

வெறும் 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 117 ரன்கள் அபார வெற்றி பெற்றது. திரிஷா 56 ரன்களுடனும், சனிகா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நடப்பி சாம்பியன் ஆன இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

! The unbeaten run in the #U19WorldCup continues for #TeamIndia! India march into the Final after beating England by 9⃣ wickets and will now take on South Africa in the summit clash! Scorecard ▶️ https://t.co/rk4eoCA1B0 #INDvENG pic.twitter.com/n3uIoO1H1Q

— BCCI Women (@BCCIWomen) January 31, 2025

இதில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. 

Read Entire Article