
புதுடெல்லி,
ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியின் இறுதி சுற்றில் 16 வயது இந்திய வீரர் பார்த் ராகேஷ் மானே 250.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றார் சீனாவின் லிவான்லின் (250 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், அமெரிக்காவின் பிராடென் (229.1 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இதன் அணிகள் பிரிவில் பார்த் ராகேஷ் மானே, அஜய் மாலிக், அபினவ் ஷா ஆகியோர் அடங்கிய இந்திய அணி (1883.5 புள்ளி) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு என்று பார்த் ராகேஷ் மானே இரட்டை தங்கப்பதக்கத்தை வென்றார்.
.