ஜீவா நடித்த படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

13 hours ago 1

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அர்ஜுன், ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஜீவா நடித்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர். படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Unravel the Secrets. Restore the Glory. The battle begins this January!✨ #Aghathiyaa – In cinemas Jan 31, 2025!https://t.co/Sit1Gs2FSxA @pavijaypoet Mystery ✨A @thisisysr Musical @IshariKGanesh @VelsFilmIntl @WamIndia @aghathiyaa @JiivaOfficial @akarjunofficialpic.twitter.com/s0hPmTqyMf

— WAMINDIA (@WamIndia) December 24, 2024
Read Entire Article