ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வாலிபர் திடீர் சாவு

1 day ago 3

பாலக்காடு: ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வாலிபர் மயங்கி விழுந்து இறந்தார். கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை மீட்டு அம்பலவயல் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சலீம் இறந்ததாக தெரியவந்துள்ளது.

The post ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வாலிபர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article