
லண்டன்,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு போட்டி கொண்ட (4 நாள் ஆட்டம்) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நாட்டிங்ஹாமில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் சாம் குக் மற்றும் ஜோர்டான் காக்ஸ் ஆகிய இருவர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்திருந்தனர்.
இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் ஜோர்டான் காக்ஸ் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜேம்ஸ் ரெவ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாம் குக், ஜேம்ஸ் ரெவ், ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.