புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு கொள்கையை அமல்படுத்தும் சட்டத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவு வரி அந்த நாடுகளுக்கும் விதிக்கப்படும் என டிரம்ப் கூறி உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘இப்போது அதிபர் டிரம்ப் ஜிஎஸ்டியை அச்சுறுத்துகிறார்.
ஜிஎஸ்டி இறக்குமதி பொருட்களுக்கு பொருந்தும். ஆனால் ஏற்றுமதிக்கு பொருந்தாது. இது ஒருபோதும் சர்ச்சையானதில்லை. ஆனால் இப்போது அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிகள் குறித்த பேச்சு ஜிஎஸ்டியை கேள்விக்குறியதாக்கி உள்ளது. இதன் மூலம் தேசத்தின் இறையாண்மை ஆபத்தில் உள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள டிரம்ப்பின் நல்ல நண்பர், விஸ்வகுரு என தன்னை உயர்வாக பேசிக் கொள்பவர் எழுந்து நின்றி நிலைப்பாட்டை தெரிவிப்பாரா?’’ என கேட்டுள்ளார்.
The post ஜிஎஸ்டியை அச்சுறுத்தும் டிரம்ப் நண்பர் மோடி என்ன செய்யப் போகிறார்?: காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.