ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கான நோட்டீசை எதிர்த்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

1 month ago 6

சென்னை: திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதாகக் கூறி அதற்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜுக்கு, ஜிஎஸ்டி இணை இயக்குனர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை எதிர்த்து ஹாரிஷ் ஜெயராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் முறையிட முடியும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஷ் ஜெயராஜ் பதிலளிக்கலாம். அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஹாரிஷ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து 4 வாரங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கான நோட்டீசை எதிர்த்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article