ஜி.வி.பிரகாஷின் 'இடி முழக்கம்' பட ரிலீஸ் அப்டேட்

4 days ago 2

சென்னை,

'தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கதில் சமீபத்தில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இப்படம் திரையரங்கை விட ஓ.டி.டி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, இயக்குனர் சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்திற்கு 'இடி முழக்கம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து "கானா விளக்கு மயிலே" என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'இடி முழக்கம்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article