ஜாவா 42 எப்ஜெ மோட்டார் சைக்கிள் இரண்டு எக்சாஸ்ட் உடன் சந்தையில் உள்ளது. தற்போது புதிய ஜாவா 42 எப்ஜெ மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் ஒரு புறம் மட்டுமே எக்சாஸ்ட் இடம் பெற்றுள்ளது. பைக் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஒரு புறம் மட்டுமே எக்சாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போதுள்ள ஜாவா 42 எப்ஜெ பைக்கில் ஜாவா 350யில் உள்ள 334 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளதது. இது அதிகபட்சமாக 29 எச்பி பவரையும், 29 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஜாவா 42 எப்ஜெ ஷோரூம் விலை சுமார் ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.21 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post ஜாவா 42 எப்ஜெ மோட்டார் appeared first on Dinakaran.