ஜார்ஜியா அதிகாரிகளுக்கு எதிராக விசா தடை விதித்த அமெரிக்கா

6 months ago 39

திபிலிசி,

நாட்டின் ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்படுவதாக ஜார்ஜியா அரசாங்கத்தின் மந்திரிகள் உள்ளிட்ட 20 பேருக்கு விசா கட்டுப்பாடு விதித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசா வழங்குவதில் இருந்து தடை செய்யப்படும் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இதில் மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு சேவை ஊழியர்கள் மற்றும் தனியார் நபர்கள் உள்ளடங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிடுகிறது.

மேலும் ஜார்ஜியாவில் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துபவர்களை பொறுப்பேற்க, பொருளாதார தடைகள் உட்பட கூடுதல் நடவடிக்கைகளை தயார் செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தையை 2028-ம் ஆண்டு வரை ஒத்தி வைப்பதாகவும், எனவே ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியை நிராகரிப்பதாகவும் ஜார்ஜியா பிரதமர் இராக்லி கோபாகிட்சே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article