ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2 months ago 12

சென்னை: ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஜார்க்கண்ட் தேர்தலில் அனைத்து தடைகளையும் தகர்த்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்!

அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க. உருவாக்கினாலும் – அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” என தெரிவித்துள்ளார்.

The post ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article