ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 லோகோ பைலட்டுகள் உயிரிழப்பு

1 day ago 3

ராஞ்சி: ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று இரவு கோட்டாவில் உள்ள லால்மதியாவிலிருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ஃபராக்கா என்டிபிசிக்கு நிலக்கரி ஏற்றப்பட்ட ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. பர்ஹாட்டின் சோனாஜோடி அருகே லூப் லைனில் ஒரு காலியான சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. இதற்கிடையில், நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயில், லூப் லைனில் வந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த மோதலில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. பயங்கர மோதலின் காரணமாக சரக்கு ரயிலின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. இதில் காலியான சரக்கு ரயிலின் ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே பரிதமபாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த என்டிபிசி மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் ரயில்வேக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

The post ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 லோகோ பைலட்டுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article