ஜார்கண்டில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

1 week ago 2

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலிருந்து பஸ் ஒன்று பயணிகளுடன் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கோர்ஹர் காவல் நிலைய பகுதிக்கு அருகே சென்ற பஸ் சாலையில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சில் மேலும் சிலர் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி ஹசாரிபாக் எஸ்பி அரவிந்த் குமார் சிங் கூறுகையில், பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்ததாகவும், விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article