ஜார்கண்டில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி

6 months ago 26

ராஞ்சி,

ஜார்கண்டில் உள்ள பொகாரோ-ராம்கர் தேசிய நெடுஞ்சாலையில் டிரக் மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து நேற்று மாலை பொகாரோவின் காஷ்மர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்து கிராமத்திற்கு அருகில் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பி.என்.சிங் கூறுகையில், "சாலையில் மறியலில் சிக்கிய டிரக் மீது கார் பின்னால் இருந்து மோதியது. இதில் காரில் பயணித்த 8 பேரில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார். மொத்தம் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்துக்கு முன், மற்றொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Read Entire Article