ஜல்லிக்கட்டு காளைகள் மேய்ச்சலால் தகராறு 2 பேர் மீது வழக்கு

2 months ago 11

மதுரை, நவ. 17: மதுரையில், ஜல்லிக்கட்டு காளைகளை மேய்ச்சலுக்கு விட்டதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மதுரை, சிந்தாமணி கண்மாய்க்கரை ஏரியாவில் உள்ள மடைக்கருப்பு கோயில் அருகில் தரிசு நிலங்கள் அதிக அளவில் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த பாண்டி மற்றும் கண்ணன் ஆகியோர், அவரவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் அந்த காளைகள் இரண்டும், திடீரென ஒன்றுடன் ஒன்று பலமாக முட்டிக்கொண்டன.

இதில் இரு ஜல்லிக்கட்டு மாடுகளும் காயமடைந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த பாண்டியை கண்ணன் மகன்கள் அஜீத்பாண்டி(22), அருள்பாண்டி(20) ஆகியோர் வழிமறித்து, மாடுகளுக்குள் நடந்த மோதல் குறித்து தகராற செய்துள்ளனர். பின்னர் விறகு கட்டையால் அவரை தாக்கியதா தெரிகிறது. இது தொடர்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஜல்லிக்கட்டு காளைகள் மேய்ச்சலால் தகராறு 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article