ஜருகு பகுதியில் ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

1 month ago 9

*தொற்று நோய் பரவும் அபாயம்

நல்லம்பள்ளி : மானியதனஅள்ளி ஊராட்சியில் வீடு, கடைகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை ஜருகு ஏரியில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதன அள்ளி ஊராட்சியில் வீடு, கடைகளில் தூய்மை பணியாளர்கள் சேகரிக்கும் மக்கும், மக்காத குப்பை கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரித்து உரமாக்கி வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக வீடுகளில் பெறப்படும் குப்பை கழிவுகளை காலி நிலத்தில் கொட்டி தீவைத்து எரித்து அழிக்கின்றனர்.

மேலும், கடைகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள், கோழி கடை கழிவுகளை ஜருகு பகுதியில் உள்ள ஏரிக்கரைகளில் கொட்டி வருகின்றனர். இதனால், மலை போல குப்பை கழிவுகள் தேங்கி உள்ளன. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் துர்நாற்றத்தால் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில், இதுபோன்ற கழிவுகளை கொட்டி வருவதால் தண்ணீர் நிரம்பும்போது மாசுபடும். எனவே ஜருகு ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஜருகு பகுதியில் ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Read Entire Article